மூடு

செ.வெ.எண்:56- “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் உதவி

வெளியிடப்பட்ட தேதி : 04/02/2025

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 78-வது சுதந்திர தினத்தன்று (15-08-2024) முன்னாள் படைவீரர் நலனுக்காக “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.  எனவே,நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள்ஃ இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்கள் 10.02.2025-க்குள் உதகமணடலம். கூட்செட் சாலையில் அமைந்துள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அணுகி விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.(PDF 40KB)