செ.வெ.எண்:595- தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கான களஉதவியாளர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் உதகையில் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 30/09/2025
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய அறிவிக்கை கடிதத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை) – II.
1794 களஉதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணியிடத்திற்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் மின்பணியாளர் அல்லது கம்பியாளர் கல்விப்பிரிவில் தொழிற்பயிற்சி சான்று(ITI) பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணியிடத்திற்கு இணையவழியில் விண்ணப்பிக்க www.tnpsc.gov.in வழியாக அறிந்துக்கொள்ளலாம்.
இத்தேர்விற்க்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் உதகை கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக நடைபெற உள்ளது. (PDF 209KB)