செ.வெ.எண்:631- நீலகிரி மாவட்டத்தில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல்
நீலகிரி மாவட்டத்தில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் (African Swine Fever) உறுதி செய்யயப்பட்டுள்ளது. எனவே, பன்றி வளர்ப்போர் மற்றும் பண்ணைகள் அமைத்து பன்றிகள் வளர்ப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்நோய் பன்றிகளுக்கு மட்டுமே பரவக்கூடியதால், இதர கால்நடை வளர்ப்போர் அச்சப்பட தேவையில்லை.
மேலும் இந்நோய் மனிதர்களுக்கு பரவக்கூடியதும் இல்லை. எனவே பன்றிகள் வளர்க்கும் தனிநபர்கள் மற்றும் பண்ணையாளர்கள் இந்நோய் குறித்து அறிந்து கொள்ளவும், இக்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு முறைகள் குறித்தும் அறிந்து கொள்ள அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகிட, நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 47KB)