செ.வெ.எண்:642- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்விற்கு முழு மாதிரித்தேர்வுகள் நடைபெறவுள்ளது
விண்ணப்பித்த நபர்கள் பயன்பெறக்கூடிய வகையில் காவல்துறை சார்பு ஆய்வாளர் பாடத்திட்டத்தை உள்ளடக்கிய மண்டல அளவில் 22.10.2025, 29.10.2025, 05.11.2025, 12.11.2025, 19.11.2025, 26.11.2025, 03.12.2025, 10.12.2025 மற்றும் 17.12.2025 ஆகிய தேதிகளில் முழு மாதிரித்தேர்வுகள் மட்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சார்பு ஆய்வாளர் பணியிடத்திற்க்கான போட்டித்தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள், இம்முழு மாதிரித்தேர்வினை பயன்படுத்தி தங்களை தயார் படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதில் கலந்துகொள்ள விருப்பமும் , தகுதியும் உள்ள நபர்கள் 0423-2444004 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது 7200019666 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இத்தேர்விற்கு விண்ணப்பித்த ஆர்வலர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 112KB)