மூடு

செ.வெ.எண்:644- நீலகிரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தனித்தனி அறைகள் ஏற்படுத்தி இருப்பு வைப்பு

வெளியிடப்பட்ட தேதி : 18/10/2024

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, சட்டமன்ற தொகுதி வாரியாக (108-உதகமண்டலம், 109-கூடலூர் (தனி) மற்றும் 110-குன்னூர்) தனித்தனி அறைகள் ஏற்படுத்தி இருப்பு வைக்கும் பொருட்டு, பொதுப்பணித்துறையின் அலுவலர்கள் மூலம் அளவீடு பணிகள் மேற்கொள்ள மற்றும் மாதாந்திர ஆய்விற்காக, நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (18.10.2024) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு திறக்கப்பட்டது. (PDF 106KB)