செ.வெ.எண்:644- பழங்குடியின உண்டு உறைவிட பள்ளிகளுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து குழந்தைகள் தினந்தோறும் பயனடைந்து வருகின்றனர்
வெளியிடப்பட்ட தேதி : 16/10/2025
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியினர் பள்ளி குழந்தைகளின் வருகையை ஊக்குவிக்கும் வகையிலும் இடைநிற்றலை குறைக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் மூலம் ரூ.41.33 இலட்சம் மதிப்பில் நீலகிரி மாவட்டத்தில் குஞ்சப்பனை, பொக்காபுரம் மற்றும் கார்குடி பகுதியில் இயங்கும் மூன்று 3 பழங்குடியின உண்டு உறைவிட பள்ளிகளுக்கு பள்ளி வாகனங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து, பள்ளி வாகனத்தில்
- குஞ்சப்பனை பள்ளிக்கு 25 மாணாக்கர்களும்,
- பொக்காபுரம் பள்ளிக்கு 27 மாணாக்கர்களும் மற்றும்
- கார்குடி பள்ளிக்கு 64 மாணாக்கர்களும்
என மொத்தம் 116 குழந்தைகள் தினந்தோறும் பயனடைந்து வருவதாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.பீட்டர் ஞானராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 212KB)
