மூடு

செ.வெ.எண்:69- வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் செய்தி வெளியீடு

வெளியிடப்பட்ட தேதி : 02/02/2026

நீலகிரி மாவட்டம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை நீலகிரி அலகில் பொது விநியோக திட்ட அரிசியை வாகனம் எண் KL 13H 1959 MARUTHI OMNI ல் கடத்தி சென்ற போது 28.02.2014 அன்று 45 கிலோ எடை கொண்ட 12 மூட்டைகள் வீதம் 540 கிலோ பொது விநியோக திட்ட அரிசி கைப்பற்றப்பட்டது. நாளது வரை இவ்வாகனத்தின் உரிமையாளர் விசாரணைக்கு ஆஜராகாததால் இந்த வாகனத்தை பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வாகனத்தின் உரிமையாளர்கள் அல்லது இந்த ஏல நடவடிக்கை குறித்து ஆட்சேபனை உள்ளவர்கள் இந்த அறிவிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் தங்களின் கோரிக்கையை நீலகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 91KB)