செ.வெ.எண்:691- நீலகிரி மாவட்டம் எமரால்டு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் (10.11.2024) வெளியேற்றப்பட உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
வெளியிடப்பட்ட தேதி : 09/11/2024
நீலகிரி மாவட்டம், காட்டுக்குப்பை பகுதியில், புதியதாக உருவாக்கப்பட்டு வரும் குந்தா நீர்மின் உற்பத்தி நிலைய (4x125MW) பணிகளுக்காக எமரால்டு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் 10.11.2024 காலை 11.00 மணியளவில் வினாடிக்கு 1000 கனஅடி வீதமாக 30 நாட்களுக்கு தொடர்ந்து திறக்கப்பட உள்ளது. வெளியேற்றப்படும் நீர் எடக்காடு கால்வாய் வழியாக குந்தா பாலம் அணையை சென்றடையும். எனவே, அணைநீர் செல்லும் பாதையின் அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் அணையில் உள்ள நீர் திறக்கப்படும் 30 நாட்களுக்கும் பாதுகாப்பாக இருக்குமாறும், இது தொடர்பாக, உதவி தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் (24×7) கட்டுபாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 0423-2450035– க்கு தொடர்பு கொள்ளலாம். (PDF 445KB)