செ.வெ.எண்:706- பெண் குழந்தைக்கான மாநில விருது
வெளியிடப்பட்ட தேதி : 18/11/2024
தமிழக அரசு, சமூகநலன்; மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் “பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும், பாடுபட்டு வீரதீர செயல்புரிந்து வரும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் முகமாக அதற்கான மாநில விருது ஒன்றை அறிவித்து அரசாணை பிறப்பித்து கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
இதன்படி வருடந்தோறும் மேற்குறிப்பிட்டவாறு சேவை புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24) பாராட்டு பத்திரமும், ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. (PDF 223KB)