செ.வெ.எண்:726- தபால் துறை ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் வரும் 12.12.2024 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 29/11/2024
நீலகிரி கோட்ட அளவிலான தபால் துறை ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் வரும் 12.12.2024 அன்று காலை 11.30 மணியளவில் நீலகிரி கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தபால் துறை ஓய்வூதியதாரர்கள் ஏதேனும் குறைகள் இருப்பின் கடிதம் மூலமாக அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், உதகமண்டலம் 643001 என்ற முகவரிக்கு 08.12.2024-க்குள் சேர்ப்பிக்கும்படி இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. (PDF 252KB)