செ.வெ.எண்:762- நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வாடகைக்கு வழங்கும் திட்டம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட தேதி : 17/12/2024
நீலகிரி மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையில் இ-வாடகை திட்டத்தின் மூலம் வேளாண் கருவிகளை வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்ட விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறையின் இ-வாடகை திட்டத்தில் உழவர் செயலியின் மூலம் குறைந்த செலவில் வேளாண் கருவிகளை வாடகைக்குப் பெற்று பயன் பெறலாம். இதன் மூலம் தனியாருக்கு அதிக தொகை கொடுத்து வேளாண் கருவிகள் வாங்க இயலாத விவசாயிகள் குறைந்த செலவில் பயன்பெற முடியும்.(PDF 35KB)