செ.வெ.எண்:795- இந்திய அஞ்சல் துறையின் கடிதம்/பார்சல் புக்கிங்சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 24/12/2025
நீலகிரி கோட்டத்தில் உள்ளுர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வணிகர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளின்படியும் பொதுமக்களின் சேவையைக்கருதியும் கடிதம்/பார்சல் புக்கிங்சேவை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம். மேலும் இதனை தொடர்ந்து இந்த சேவையை விரிவுபடுத்தும் விதமாக வாடிக்கையாளர்களின் நலன்கருதி நீலகிரி கோட்டத்தில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் துணை அஞ்சலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
- தலைமை அஞ்சலகத்தில்: காலை 8 மணி முதல் மாலை 8 மணிவரையிலும்
- துணை அஞ்சலகத்தில்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புக்கிங் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.(PDF 53KB)