செ.வெ.எண்:796- அஞ்சல் துறையில் நவீன டிஜிட்டல் சேவைகள் – பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது
வெளியிடப்பட்ட தேதி : 26/12/2025
அஞ்சல் அலுவலகங்கள் மூலம் மற்றும் ஆன்லைன் வழியாக வழங்கப்படும் முக்கிய சேவைகள் வருமாறு:
- e-KYC (மின்னணு அடையாள உறுதிப்படுத்தல்)
- Internet Banking (இணைய வங்கி சேவை) – Mobile Banking (மொபைல் வங்கி சேவை)
- ATM சேவைகள்
- தனிப்பயன் (Personalized) ATM கார்டுகள்
- ஆதார் இணைப்பு (Aadhaar Seeding)
நீலகிரி கோட்டத்திற்க்குட்பட்ட உதகமண்டலம் தலைமை அஞ்சலகத்தில் பொதுமக்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீட்டிக்கப்பட்ட அலுவலக நேரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு தங்கள் அருகிலுள்ள அஞ்சலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் மற்றும் www.indiapost.gov.in. என்ற இணையதள முகவரியிலும் தகவல்களை பெறலாம் என்று நீலகிரி கோட்டம் உதகமண்டலம் – 643001 அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திரு.அசோக் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 60KB)