தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்)
மகளிர் திட்டம்:
மகளிர் திட்டமானது மகளிரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. மகளிர் திட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களின் தரத்தை அக்குழுக்களுக்கு வழங்கப்படும் குழு ஊக்குநர், பிரதிநிதிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் பயிற்சியின் மூலம் மகளிர் திட்டமானது உறுதி செய்கிறது. இந்த பயிற்சியானது மகளிருடைய வாழ்க்கையில் தரமான மாற்றத்தையும் நல்ல முறையில் குழுக்களை நடத்துவதற்கு உறுதி செய்கிறது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்:
தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற புதிய திட்டத்தை 2012-13 முதல் அமலாக்கியுள்ளது. இ;த்திட்டத்தின் செயல்பாடுகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசு 60:20 என்ற விகிதத்தில் நிதி செலவு செய்கிறது. ஊரக ஏழை மக்களுக்கான வலுவான, உயிரோட்டத்துடன் கூடிய அமைப்புகளை உருவாக்கி, நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத பல்வேறு சேவைகளையும் முறையாகப் பெற வழிவகை செய்து, வாழ்வாதாரத்தை உயர்த்தி குடும்ப வருமானத்தைப் பெருக்குவதே இவ்வியக்தத்தின் நோக்கமாகும்.. இந்நோக்கத்தினை மையமாகக் கொண்டு, ஏழை எளியவர்கள் அடங்கிய மக்கள் அமைப்புகளை உருவாக்கி, அதன் மூலமாக அவர்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்கள், வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகள், பொதுவான சேவைகள், அடிப்படை வசதிகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு இவ்வியக்கம் வழிகாட்டும்.
அடிப்படை நோக்கங்கள்:
- முழுமையான சமூக ஒருங்கிணைப்புடன் கூடிய சமூக உள்ளாக்கம்
- ஏழை மக்களுக்கான மக்கள் அமைப்புகளை உருவாக்குதல்
- நிதி உள்ளாக்கம்
- பொருளாதாரச் செயல்பாடுகள் மூலம் ஏழைகளுக்கு நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்குதல்
- திறன் மற்றும் வேலை வாய்ப்பு (திறனுக்கேற்ற வேலை வாய்ப்புகள்)
- சேவைகள் உரியவர்களை சென்றடைவதை உறுதி செய்தல் (சமூக வல்லுநர்களுடன் சமூகத்தின்பால் பற்று கொண்டு மக்களின் மேம்பாட்டிற்கான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் மூலமாக)
- அரசின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, நிதி ஆதாரங்களை பெருக்குதல்
தீன் தயாள் அந்தோதயா யோஜனா – தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம்:
தீன் தயாள் அந்தோதயா யோஜனா என்பது நகர்புற ஏழை மக்களுடைய வறுமை நிலையை போக்குவதற்காக கொண்டுவரப்பட்ட திட்டமாகும் நகர்புற ஏழை மக்களுக்கு சுய தொழில் செய்ய, வேலைக்கு செல்லும் நபர்களின் திறமைகளை வளர்த்தல் ஆகியவற்றிற்கு பயிற்சிகள் கொடுக்கிறது. இ;த்திட்டத்தின் செயல்பாடுகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசு 60:40 என்ற விகிதத்தில் நிதி செலவு செய்கிறது.
உட்கூறுகள்:
- சமுதாய அமைப்புகள் உருவாக்குதல்
- பயிற்சிகள் வழங்குதல்
- பயிற்சிகள் மூலம் வேலைவாய்ப்பு வழங்குதல்
- சுயவேலைவாய்ப்பு திட்டம்
- தெரு வியாபாரிகளுக்கு உதவி செய்தல்
- நகர்புறத்தில் வீடு இ;ல்லாதவர்களுக்கு தங்குமிடம் அமைத்துக் கொடுத்தல்
மகளிர் திட்டத்தின் முதன்மை செயல்பாடுகள்:
- குழுக்களுக்கு தரமதிப்பீடு செய்து கடன் இணைப்பு செய்தல்
- சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்குதல்
- ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் அமைத்தல்
- இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி அளித்தல்
- மணிமேகலை விருது வழங்குதல்
- கலாச்சார போட்டிகள் நடத்துதல்
- வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துதல்
- கண்காட்சி நடத்துதல்
- கல்லூரி சந்தை நடத்துதல்
தொடர்பு முகவரி:
1பி பிளாக்,
கூடுதல் மாவட்ட ஆட்சியர் வளாகம்,
பிங்கர் போஸ்ட், உதகை,
நீலகிரி மாவட்டம்.
தொலைபேசி எண்:- 0423-2444430
அலைபேசி எண்:- 9444094314