மூடு

வரலாறு

நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம் ஆண்டு அப்போதைய கோயம்புத்தூர் மாவட்ட அட்சியர் ஜான் சுல்லிவன் அவர்களின் உதவியாளர்கள் திரு விஸ் மற்றும் கிண்டர்ஸ்லி ஆகியோர் ரங்கசாமி சிகரத்தில் உள்ள கோத்தகிரி என்னும் இடத்தை கண்டறிந்தனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜான் சுல்லிவன் அவர்கள் இந்த இடத்தின் மீது மிகுந்த ஆர்வமாக இருந்தார். 1819 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதியன்று அவர் தனது குடியிருப்புகளை அங்கு நிறுவியதோடு, வருவாய் சபைக்கும் அறிக்கை செய்தார்.

‘நீலகிரி’ என்பது நீல மலை ஆகும் (நீல – நீலம் மற்றும் கிரி – மலை) இந்த பெயரைப் பற்றி முதன் முதலில் குறிப்பிடுகையில் சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. மலைப்பகுதிகளை சூழ்ந்து கொண்டிருக்கும் ‘குறிஞ்சி’ பூவின் ஊதா பூக்கள் மலரும் காலப்பகுதியில், மலைகளின் அடிவாரத்தில் வாழும் மக்கள், நீலகிரி என்ற பெயரைக் கொடுத்திருக்க வேண்டும். நீலகிரி அரசியல் வரலாற்றின் முந்தைய குறிப்பு, W. பிரான்சிஸ் படி, மைசூர் கங்கா வம்சத்தை சார்ந்திருக்கிறது.

1789 ஆம் ஆண்டு நீலகிரி பிரிட்டிஷ் அரசிடம் கொடுக்கப்பட்டவுடன், அது கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1868 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீலகிரி கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. ஜேம்ஸ் வில்கின்சன் பிரிக்ஸ் நீலகிரியின்  ஆணையராக நிர்வாகத்தை எடுத்துக் கொண்டார். அவர் 1882 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நீலகிரி மாவட்டத்தை அமைத்தார் பின் ஆணையர் இடத்தில் ஒரு ஆட்சியர் நியமிக்கப்பட்டார். 1882 ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி, ரிச்சர்ட் வெலெஸ்லி பார்லோ நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியர் ஆனார்.