மாவட்ட ஆட்சியர்
திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,
நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 2015 ஆம் ஆண்டுக்குரிய இந்திய ஆட்சிப்பணியைச் சேர்ந்தவர் ஆவார்.
திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக 17.07.2024 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் தொழில்நுட்ப இளங்கலை பட்டமும் பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.
இவர் நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்பதற்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் வணிகவரி இணை ஆணையராகப் பணியாற்றியுள்ளார்.