மாவட்ட ஆட்சியர்
திரு. சா.ப. அம்ரித் இ.ஆ.ப.,

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர் திரு. சா.ப. அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் 2013 ஆம் ஆண்டுக்குரிய இந்திய ஆட்சிப்பணியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். திரு. சா.ப. அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக 25.11.2021 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் புதுக்கோட்டையில் சார் ஆட்சியராகவும், கோவையில் வணிகவரித்துறை(அமலாக்கம்) இணை ஆணையராகவும், மதுரையில் கூடுதல் ஆட்சியராகவும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் செயல் அலுவலராகவும், பொதுத்துறையில் (சட்டம்-ஒழுங்கு) துணைச் செயலாளராகவும், நகராட்சி நிர்வாக இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.