மூடு

செ.வெ.எண்: 506 – வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம்-2025 சிறப்பு திருத்தப்பணிகள் 20.08.2024 முதல் துவங்கப்பட்டுள்ளன.

வெளியிடப்பட்ட தேதி : 22/08/2024

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக சிறப்பு திருத்தப்பணிகள் நீலகிரி மாவட்டத்தில் இன்று 20.08.2024 (செவ்வாய் கிழமை) முதல் துவங்கப்பட்டுள்ளன. அதன்படி, 2025 ஜனவரி 01 – ஆம் தேதியைத் தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நடத்தப்பட்டு, வரும் ஜனவரி 06 – ஆம் தேதியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.  (PDF 125KB)