மூடு

செ.வெ.எண்:138- “சில்லஹல்லா நீரேற்று புனல்மின்திட்டம் நிலை-I” ற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 17/03/2025

நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், குந்தா கிராமத்தில் அமையவிருக்கும் “சில்லஹல்லா நீரேற்று புனல்மின்திட்டம் நிலை-I” ற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2006 இன்படி பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 20.03.2025 காலை 11.00 மணியளவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக அன்றைய தின கருத்துகேட்பு கூட்டம் நடைபெறுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 59KB)