மூடு

செ.வெ.எண்:14- திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் குறளாசிரியர் மாநாட்டிற்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அழைப்பு

வெளியிடப்பட்ட தேதி : 06/01/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வோரு ஆண்டும் குறள்வாரம் கொண்டாடப்பட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவ்வறிவிப்பினைச் செயல்படுத்தும் பொருட்டு 2026ஆம் ஆண்டு சனவரி திங்களில் மாநிலம் முழுவதும் குறள்வார விழாவினை நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.(PDF 53KB)