செ.வெ.எண்:165- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் நீலகிரி மாவட்ட வருகையை முன்னிட்டு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 29/03/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 05.04.2025 அன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, 06.04.2025 அன்று உதகை அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில், நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளதால், விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 34KB)