மூடு

செ.வெ.எண்:223- நீலகிரி மாவட்ட கோடை விழா – 2025

வெளியிடப்பட்ட தேதி : 07/05/2025

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா மே மாதத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பிறத் துறைகளுடன் இணைத்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

கோடை விழாவில் கலைநிகழ்ச்சிகள்: 10.05.2025 முதல் 15.05.2025 வரை உதகை படகு இல்லத்தில் நடத்தப்படவுள்ளது.

படகுப்போட்டி: 13-5-2025 அன்று காலை 11 மணியளவில் உதகை ஏரியில் நடத்தப்படவுள்ளது.

புகைப்பட கண்காட்சி: 7-5-2025 முதல் 31-5-2025 வரை பழங்குடியினர் பண்பாட்டு மையம் உதகையில் நடத்தப்படவுள்ளது.

பாரம்பரிய நடை பயணம், புகைப்பட நடை பயணம், உணவு நடைபயணம்: 06.05.2025 அன்று முதல் 31.05.2025 வரை நடைபெறுகிறது.(PDF 280KB)