செ.வெ.எண்:230- தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பு [CPEI] ஜீன் 2025 முதல் தொடங்கவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 09/05/2025
தொழில் முனைவோராக வேண்டுமா ? இந்த அரிய வாய்ப்பினை தவற விடாதீர்கள்!
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), அகமதாபாத் EDII உடன் இணைந்து கடந்த ஆண்டு முதல் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பினை [CPEI] நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த கல்வி பயின்று வருகின்றனர். பாடத்திட்டம் மேம்பாடு மற்றும் நிபுணர்களின் பயிற்சி மூலம் தொழில்முனைவோரை வளர்ப்பதில் EDII அகமதாபாத், தனது பரந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
இந்த ஆண்டும் சான்றிதழ் படிப்பு ஜீன் 2025 முதல் தொடங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் (ஆன்லைன் முறையில் ) வரவேற்கப்படுகின்றன.(PDF 443KB)