மூடு

செ.வெ.எண்:235- நீலகிரி மாவட்டத்தில் 127-வது மலர்க் கண்காட்சியினை முன்னிட்டு 15.05.2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது  

வெளியிடப்பட்ட தேதி : 13/05/2025
நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் 15.05.2025 (வியாழக்கிழமை) அன்று 127-வது மலர்க்கண்காட்சி நடைபெறவுள்ளதால், மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.
மேற்கண்ட 15.05.2025  விடுமுறை நாளினை ஈடுசெய்ய எதிர்வரும் 31.05.2025 (சனிக்கிழமை) அன்று மாவட்டத்திற்கு பணி நாளாக இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது என  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 191KB)