செ.வெ.எண்:242- பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான விருது- 2025
வெளியிடப்பட்ட தேதி : 20/05/2025
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவைபுரிந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் சுதந்திர தினவிழாவின் போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படுகிறது. இவ்விருது பெறும் சமூக சேவகருக்கு ரூ.50,000/- ரொக்கப்பரிசு மற்றும் சான்று வழங்கப்படும். சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1,00,000/- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். எனவே தகுதியான நபர்கள் மற்றும் நிறுவனங்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 12.06.2025-க்குள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.(PDF 200KB)