செ.வெ.எண்:248- சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் தேசிய விருது
வெளியிடப்பட்ட தேதி : 21/05/2025
பேரிடர் மேலாண்மை துறையில் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் செய்த சிறந்த பணிகளை அங்கீகரிக்க இந்திய அரசு சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் (Subash Chandra Bose Aapda Prabandhan Puraskar) என்ற வருடாந்திர தேசிய விருதை வழங்கவுள்ளது.
விருதுக்கான விண்ணப்பங்களை (https://awards.gov.in.) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்யும் காலம் 01.05.2025 முதல் 30.09.2025 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விருது பற்றிய விரிவான விவரங்களை அறிய நீலகிரி மாவட்ட nilgiris.nic.in. என்ற வலைதளத்தில் சென்று அறிந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.(PDF 49KB)