செ.வெ.எண்:27- நீலகிரி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் மிதிவண்டி பேரணி
வெளியிடப்பட்ட தேதி : 23/01/2025

நீலகிரி மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” (Beti Bachao Beti Padhao) திட்டத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு தினத்தை கொண்டாடும் வகையில், நடைபெற்ற கையெழுத்து இயக்கம் மற்றும் மிதிவண்டி பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 38KB)