மூடு

செ.வெ.எண்:27- நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட சமூக நலத்துறை மூலம் சிறப்பு முகாம்கள் மற்றும் கையெழுத்துப் பிரச்சாரம் நடத்தப்பட உள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 10/01/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி, சிறப்பு தீவிரத்திருத்தம், 2026 – ஆனது கடந்த 04.11.2025 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் (80+) மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் செய்ய, எதிர்வரும் 10.01.2026 (சனிக்கிழமை), 11.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 12.01.2026 (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் கீழ்கண்ட இடங்களில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட சமூக நலத்துறை மூலம் சிறப்பு முகாம்கள் மற்றும் கையெழுத்துப் பிரச்சாரம் நடத்தப்பட உள்ளது .(PDF 392KB)