செ.வெ.எண்:270 – இ பாஸ் பற்றிய உதகமண்டலம் வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்கள் செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட தேதி : 03/05/2024
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 07.05.2024 முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் E பாஸ் பெற்றே வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீலகிரி மாவட்ட பதிவு எண் “TN 43” பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு E பாஸ் தேவையில்லை.
வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களை வாங்கி நீலகிரி மாவட்டத்தில் வாகன உரிமை மாற்றம் செய்திருக்கும் பொதுமக்கள் வாகனத்தின் அசல் பதிவுச்சான்று, காப்புச்சான்று மற்றும் நடப்பிலுள்ள புகைச்சான்று ஆகியவற்றுடன், உதகை வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தை அணுகினால், ஆவணங்களை சரிபார்த்து உதகை வட்டடாரப்போக்குவரத்து அலுவலகத்தால் ஏ பாஸ் வழங்கப்படும் என உதகமண்டலம் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
(PDF 29KB)