• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:409- பொதுமக்கள் நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் Cottages/Home Stays/Lodges/Resorts குறித்த புகார்களை மாவட்ட ஆட்சியரகத்திற்கு தெரிவிக்கலாம்

வெளியிடப்பட்ட தேதி : 25/07/2025

மாண்பமை சென்னை உயர்நீதி மன்ற உத்திரவிற்கிணங்க, நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் Cottages/Home Stays / Lodges / Resorts ஆகியவற்றை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் மாவட்ட வருவாய் அலுவலர், நகராட்சி ஆணையாளர், மாவட்ட சுற்றுலா அலுவலர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களை கொண்ட குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பொதுமக்கள் நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் Cottages/Home Stays/Lodges/Resorts குறித்த புகார்களை மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள (Helpline No) 94427 72709 எண்ணிற்கு தெரிவிக்கலாம் (அ) இதே எண்ணிற்கு Whatsapp மூலமாகவும் புகார் அனுப்பலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 56KB)