• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:421- “தமிழ்ச்செம்மல்” விருது – 2025

வெளியிடப்பட்ட தேதி : 30/07/2025

நீலகிரி மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சிக்காக சங்கங்கள் வைத்து அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்தம் தமிழ்த்தொண்டினைப் பாராட்டி பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் “தமிழ்ச்செம்மல்” விருதும், விருதினைப் பெறுபவர்களுக்கு ரூ.25,000/- பரிசுத்தொகையும் தகுதியுரையும் வழங்கப்பெறும்.

விருதுக்குரிய விண்ணப்பப் படிவத்தினை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com, என்ற வலைத்தளத்தில் விண்ணப்பப்படிவங்கள் என்ற தலைப்பில் உள்ள இணைப்பின் மூலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.(PDF 41KB)