• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:454- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோத்தகிரி பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் சீரமைக்கப்பட்டு வரும் குடிநீர் விநியோக பணியினை ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 03/08/2024
P.R.NO. 454 - 0324

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பேரூராட்சியில், அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ், ரூ.42.69 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வரும் குடிநீர் விநியோக பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.08.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதன் மூலம் கோத்தகிரி நகர பகுதிகளிலுள்ள சுமார் 9 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவார்கள். (PDF 21KB)

P.R.NO. 454 - 0124 P.R.NO. 454 - 0224