செ.வெ.எண்:460- சுதந்திர தின விழாவை முன்னிட்டு உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2025
2025-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகிற 15.08.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மாவட்டத்தில் சிறப்பாக செயலாற்றியவர்களை சிறப்பிக்கும் பொருட்டு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்குகிறார். மேலும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. எனவே, சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 30KB)