• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:461- இ – நாம் திட்டத்தில் விளை பொருட்களை விற்பனை செய்து அதிக லாபம் பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு

வெளியிடப்பட்ட தேதி : 11/08/2025
விவசாயிகள் பயன் பெறும் வகையில் மத்திய அரசால் மின்னணு தேசிய வேளாண் சந்தைதிட்டம் (e-NAM) செயல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களை இணையம் மூலம் ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அதிகவிலை கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 157 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் உதகை ஆகிய 2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில்  இ-நாம் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. (PDF 47KB)