செ.வெ.எண்:51- குடியரசு தின விழா அழைப்பிதழ் – 2026
வெளியிடப்பட்ட தேதி : 23/01/2026
2026- ஆம் ஆண்டு குடியரசு தினவிழாவை முன்னிட்டு வருகிற 26.01.2026 (திங்கட்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு உதகை அரசுகலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு .இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு இந்திய தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மாவட்டத்தில் சிறப்பாக செயலாற்றியவர்களை சிறப்பிக்கும் பொருட்டு பாராட்டு சான்றிதழ்கள் வழங்குகிறார்.
மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. எனவே குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.(PDF 39KB)