செ.வெ.எண்:485- நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்தல் வேண்டும்
வெளியிடப்பட்ட தேதி : 19/08/2025
மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டிற்கு ஆளானவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள் ஃ மையங்கள் (Mental Health Establishment) செயல்பட்டு வருகின்றன. இத்தகைய மனநல நிறுவனங்கள் / அனைத்தும் மனநல பராமரிப்பு சட்டம் 2017-ன்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.(PDF 44KB)