செ.வெ.எண்:489- சிறந்த பெண் குழந்தைக்கான விருது
வெளியிடப்பட்ட தேதி : 13/08/2024
தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து இவ்விருத்துக்கான விண்ணப்ப விவரங்களை தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 10.08.2024 முதல் 30.09.2024 வரை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகம், பிங்கர் போஸ்ட், உதகை என்ற முகவரிக்கு கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்ட தலா 2 நகல்கள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 234KB)