செ.வெ.எண்:555- முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் / சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2025
நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.09.2025 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர் தம் குடும்பத்தைச் சார்ந்தோர்கள் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் இரண்டு நகல்களுடன் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து குறைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 39KB)