மூடு

செ.வெ.எண்:560- சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் (CMTC) சமுதாய பயிற்றுநர் பணிக்கு தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட தேதி : 17/09/2025

மக்கள் அமைப்புகளின் திறன்மேம்பாடு தேவைகளை முழமைகளை பூர்த்தி செய்திடும் வகையில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் (CMTC) என்ற துணை அமைப்பு மாவட்ட அளவில் செயல்படும் உயர்நிலை கூட்டமைப்பான மக்கள் கற்றல் மையத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வமைப்பு சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு தேவையான திறன்வளர்ப்பு நிதி உள்ளாக்கம் வாழ்வாதாரம் நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற சேவைகளை வழங்கிடும் ஒரு உயர்நிலை மக்கள்அமைப்பாகும். எனவே இந்த சேவைகளை வழங்கிட சமுதாய பயிற்றுநர் பணிக்கு தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.(PDF 47KB)