செ.வெ.எண்:590- அரசு தலைமைக்கொறடா அவர்கள் “தமிழ் புதல்வன்” மற்றும் “புதுமைப்பெண்” திட்டத்தின் வங்கி பற்று அட்டைகளை மாணவர்களுக்கு வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 25/09/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு தெலுங்கானா முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், சென்னை ஜவகர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று (25.09.2025) கல்வியில் சிறந்த தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியில் கொண்டாட்டம் 2025-2026 கல்வி ஆண்டிற்கான “புதுமைப்பெண் – தமிழ்ப்புதல்வன்” திட்டங்களை தொடங்கி வைத்ததை தொடர்ந்து,
நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், “தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண்” திட்டத்தின் கீழ் 20 மாணவ, மாணவியர்களுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.(PDF 122KB)