செ.வெ.எண்:594- ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தினங்களில் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்கள் பயன்பாட்டினை தவிர்த்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
வெளியிடப்பட்ட தேதி : 29/09/2025
கடந்த 01.01.2019 முதல் “ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களை தடை செய்து தமிழக அரசானது ஆணை பிறப்பிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தொடர்ந்து சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களை பொதுமக்களை பயன்படுத்த வேண்டாம் என்றும், வணிகர்கள்/வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டாம் என்றும் அவற்றிற்கு மாற்றாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தினால் பரிந்துரைக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்களை மட்டுமே பயன்படுத்தவும் மற்றும் விற்பனை செய்யுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 43KB)