மூடு

செ.வெ.எண்:619- 2025 -ம் ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 09/10/2025

2025 -ம் ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Competency Examination) நடைபெறவுள்ளது. இது குறித்து தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளர்களிடமிருந்தும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையிடமிருந்தும் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவர்களிடமிருந்தும் மற்றும் தேசிய புனரமைப்புத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளர் மற்றும் கம்பியாளர் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 155KB)