செ.வெ.எண்:623- மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 09/10/2024
நீலகிரி மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் இணைந்து 2024 – 25 ஆம் ஆண்டில் உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ் 0 முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் கீழ்க்குறிப்பிட்டுள்ள இடங்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமிற்கு நீலகிரி மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்று தேவைப்படும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் அறுவைசிகிச்சை பரிந்துரை செய்ய உள்ளனர்.(PDF 196KB)