மூடு

செ.வெ.எண்:664- நீலகிரி மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் பயன்பாட்டில் இருந்து வந்த ஈப்பு அரசு வாகனம் கழிவு நீக்கம் செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 30/10/2025

நீலகிரி மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் பயன்பாட்டில் இருந்து வந்த ஈப்பு அரசு வாகனம் எண் TN 43 G 0402 பதினைந்து வருடங்கள் கடந்த நிலையில் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறை தொழில் நுட்ப உதவியாளர் இ அரசு தானியங்கி பணிமனை உதகமண்டலம் அவர்களின்செயல்முறை ஆணை எண் அ1- 134 -2025 நாள் 12-05-2025 ன்படி மேற்படி வாகனம் முதிர்ந்த நிலையில் (Normal Condemnation) செய்யப்பட்டு               ரூ 50,100 /- க்கு குறையாமல் வாகனத்தை கழிவு நீக்கம் செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 07-11-2025 அன்று முற்பகல் 11.00 மணிக்கு அரசு நிபந்தனைகளுக்குட்பட்டு மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகம். இரண்டாம் தளம். பிங்கர் போஸ்ட் என்ற முகவரியில் வைத்து TN 43 G 0402 என்ற ஈப்பு கழிவு நிலையில் (Scarp) ஆக பொது ஏலம் விடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 44KB)