மூடு

செ.வெ.எண்:668- நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை பொருட்கள் விநியோகம்

வெளியிடப்பட்ட தேதி : 01/11/2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின்; “தாயுமானவர் திட்டத்தின்” மூலம் நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர்  மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் நவம்பர் 2025 மாதத்திற்கு 03.11.2025 மற்றும் 04.11.2025 ஆகிய நாட்களில் வழங்கப்படும்.  இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா                    தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 33KB)