செ.வெ.எண்:739- நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது வாக்காளர்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களை தீர்க்க உதவிமையங்கள் செயல்படும்
வெளியிடப்பட்ட தேதி : 01/12/2025
நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவம் நிரப்புதல் மற்றும் ஏனைய அனைத்து சந்தேகங்களுக்கும் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. உதவிமையங்கள் 02.12.2025 முதல் 11.12.2025 வரை காலை 10.00 முதல் மாலை 06.00 மணி வரை செயல்படும். எனவே, பொதுமக்கள் இச்சேவையினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்(PDF 245KB)