செ.வெ.எண்:744- அஞ்சல் துறையின் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 08.12.2025 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 04/12/2025
வாடிக்கையாளர்களின் குறைகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாகக் கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுத்து வரப்படுகின்றன. 31.12.2025 அன்று முடிவடையும் காலாண்டிற்கான டாக் அதாலத் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நீலகிரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 08.12.2025 அன்று 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
அஞ்சலக சேவை சம்பந்தமாக புகார் மற்றும் குறைகள் ஏதேனும் இருப்பின் கடிதம் மூலமாக அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், உதகமண்டலம் – 643001என்ற முகவரிக்கு உறை மேல் ” வாடிக்கையாளர் குறை தீர்க்கும் கூட்டம் சம்பந்தமாக ” என்று குறிப்பிட்டு 05.12.2025 க்குள் வந்து சேரும்படி, அனுப்பி வைக்குமாறு, நீலகிரி கோட்டம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ஜி ஆர் அசோக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 157KB)