மூடு

செ.வெ.எண்:748- நீலகிரி மாவட்டத்தில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்

வெளியிடப்பட்ட தேதி : 09/12/2025
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, கால்நடைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்கப் பெறாத கிராமங்களில் உள்ள கால்நடைகள் மற்றும் விவசாய பெருங்குடி மக்கள் பயன்படத்தக்க வகையில் 2025 – 2026 – ஆம் ஆண்டிற்கு  சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நீலகிரி மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 12 முகாம்கள் வீதம் நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு 48 முகாம்கள் நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து 04.06.2025  முதல்  13.03.2026 வரை முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு நாளது தேதிவரை 29 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.  மீதமுள்ள 19 முகாம்களை ஜனவரி 2026 மாதத்திற்குள் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே, தங்கள் பகுதிகளில் நடைபெறும் 2025-2026 ம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ஜனவரி 2026 மாதத்திற்குள்  நடைபெறுவதால், முகாம்களின் நாளினை சம்மந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர்களிடம் அறிந்து, விவசாயிகள் இந்த வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென்று மாவட்ட  ஆட்சித் தலைவர் திருமதி.. லெட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 43KB)