மூடு

செ.வெ.எண்:761- மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணி தொடங்கப்பட்டன

வெளியிடப்பட்ட தேதி : 11/12/2025
01

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கூடுதல் வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களால் இன்று (டிசம்பர் 11, 2025) காலை 09.30 மணிக்கு முதல் நிலை சரிபார்ப்பு (First Level Checking) பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டு, Control Unit – 1096, Ballot Unit – 1717 மற்றும் VVPATs – 1120 ஆகிய எண்ணிக்கையிலான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி பெங்களூரு BEL நிறுவன பொறியாளர்களை கொண்டு தொடங்கப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கின் திறத்தல் நிகழ்வின் போது அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கின் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு தொடர்பான விரிவான நடைமுறைகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் (ECI website) கிடைக்கக்கூடிய “Electronic Voting Machine Manual” –இல் குறிப்பிடப்பட்டுள்ளன.https://www.eci.gov.in/evm-vvpat.    (PDF 72KB)

03 02