செ.வெ.எண்:762- அரசு தலைமைக்கொறடா அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 12/12/2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று (12.12.2025) “வெல்லும் தமிழ் பெண்கள்” மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (இரண்டாம் கட்டம்) விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம், கிரேஸ்ஹில் அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் 3,402 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.(PDF 57KB)
